சனி, 13 பிப்ரவரி, 2016

எலிக்காய்ச்சல்

இந்த செய்தியை முடிந்த அளவுக்கு பரப்பி, எலிக்காய்ச்சல் நோயின் ( leptospirosis ) பிடியிலிருந்து சென்னை மக்களையும் ,குழந்தைகளையும் காப்பாற்றுங்கள்....
பொதுவாக சென்னையில் பருவ கால மழைக்குப்பிறகு, லெப்டோஸ்பைரோஸிஸ் ( leptospirosis ) என அழைக்கப்படும் எலிக்காய்ச்சல் மிக அதிகமாக மக்களையும், குழந்தைகளையும் தாக்கும் வாய்ப்பு மிக அதிகம். தற்பொழுது சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால், எலிக்காய்ச்சல் நோய் மக்களை தாக்குவதற்க்கான வாய்ப்புகள் மிக அதிகமே . இந்த எலிக்காய்ச்சலை உண்டாக்கும் லெப்டோஸ்பைரோ பாக்டீரியா நோய்க்கிருமி , எலியின் உடலில் வாழக்கூடியது, மேலும் இந்த நோய்க்கிருமி எலி சிறுநீர் கழிக்கும் போது, சிறு நீருடன் சேர்ந்து வெளியேறி , மழை நீருடன் கலந்து எலிக்காய்ச்சல் நோயை பரப்பும். பாம்பு போன்ற வடிவில் இருக்கும் லெப்டோஸ்பைரோ பாக்டீரியா கிருமி, கை மற்றும் கால்களில் உள்ள சிறு சிராய்ப்புகள், புண்கள், மற்றும் நோய்க்கிருமி கலந்த நீரை பருகும் பொழுதும், எலிக்காய்ச்சல் நோயை உண்டாக்கும்.இந்த எலிக்காய்ச்சல் ஆரம்ப அறிகுறிகள் சாதாரண காய்ச்சல் போன்ற ஆரம்பிக்கும், ஆனால் சாதாரணமான மருந்துகளால் இந்த நோயை கட்டுப்படுத்த முடியாது, இந்த எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக கடுமையான காய்ச்சல் , தலைவலி, கழுத்து மற்றும் முதுகு பகுதியிலுள்ள தசைகளில் மிக அதிகமான வலி, வாந்தி, மஞ்சள்காமாலை போன்ற அறிகுறிகள் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும். முறையான சிகிச்சை அளிக்கபடாவிட்டால் சிறுநீரக கோளாறு , கல்லீரல் பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு , மூளை பாதிப்பு மற்றும் உரிழப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
இந்த எலிக் காய்ச்சல் நோயை கண்டெரியும் பரிசோதனை மிக குறைந்த செலவில், சென்னை கால்நடை மருத்துவ பல்கழை கழகத்தின், ஒரு பகுதியான மாதாவரத்தில் அமைந்துள்ள ( Zoonoses Research Laboratory ) யில் செய்து தரப்படுகின்றது, அதற்க்கான முகவரி மற்றும் தொலைபேசி எண் (
Unit Head,Zoonoses Research Laboratory, Madhavaram Milk Colony , Chennai 600 051.Phone : 044- 2555 9306, 2555 0551, 2555 5151 | Fax: 044 2555 1577 ) . மேலும் எலிக்காய்ச்சல் நோயை குணப்படுத்தும் ஆன்டிபயாடிக் ( Antibiotic ) மருந்தான Doxycycline மருந்தை என்னால் முடிந்த அளவுக்கு வழங்கிட தயாராக உள்ளேன், யாராவது இலவச மருத்துவ முகாம் நடத்துபவர்கள் அல்லது சேவைப்பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் இருந்தால், என்னுடைய ஈ மெயில் அல்லது முக நூலில் தொடர்பு கொள்ளவும் ( drkarnakishor@gmail.com )

Related Posts: