செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

இந்திய நீதியும் :

காவித்தீவிரவாதிகளும் இந்திய நீதியும் :



கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை. ஆனால், குண்டுவெடிப்புக்கு காரணமான 19முஸ்லிம்கள் கொல்லப்பட்ட கோவை கலவரத்தை நிகழ்த்திய இந்துத்துவ குண்டர்களுக்கும், முஸ்லிம்களை சுட்டுத்தள்ளிய போலீஸுக்கும், தடையுமில்லை; தண்டனையுமில்லை.
பழனி பாபாவின் ஜிஹாத் கமிட்டிக்கு தடை. பழனி பாபாவை கொன்றவர்களுக்கோ விடுதலை. முஸ்லிம் மாணவரமைப்பான சிமிக்கு தடை,ஆனால் சிமியின் பெயரால் இந்தியா முழுதும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய RSSகு சுதந்திரம்.
மாலேகான், புனே,அஜ்மீர்,ஹைதராபாத்,கோவா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட அபினவ் பாரத், சனாதன் சன்ஸ்தான், இந்து ஜாக்ருதி சமிதி, என பல பெயரில் இயங்கும் RSSஐ தடை செய்ய அரசுக்கு துணிவில்லை.
குண்டுவெடிப்புகளில் RSSக்கு தொடர்பிருப்பதற்கான எல்லா வகையான ஆதாரங்களும், வீடியோக்களும் கிடைத்த பிறகும் Headlines today,தெஹல்கா போன்ற பெரிய ஊடகங்கள் அதை அம்பலப்படுத்திய பிறகும் RSS தலைமையகத்தை சோதனையிடவோ, அதன் தலைவர்களை விசாரிக்கவோ அரசு தயாராகவில்லை .
நந்திகத்தில் RSS ஊழியர் வீட்டில்,கான்பூரில் பஜ்ரங்தள் நிர்வாகி வீட்டில்,தென்காசி RSS ஆபிஸில் குண்டுவெடிப்பு என RSSகாரர்கள் குண்டுகளை தயாரித்துகொண்டிருக்கும்போதே வெடித்து சிதறிய குண்டுகள் ஏராளம்.
குஜராத்தில் 3000முஸ்லிம்களை கொன்று நரவேட்டையாடிய மோடியை அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்க்கின்றனர்.
போபாலில் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றுகுவித்த அமெரிக்க பயங்கரவாதி ஆண்டர்சனை விமானத்தில் ஏற்றி தப்பி ஓடச்செய்தனர்.
பாபர் மஸ்ஜித் இடிப்பில் மிக முக்கிய குற்றவாளிகளாக லிபரான் கமிஷனால் அடையாளப்படுத்தப்பட்ட அத்வானி,வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி ,உமாபாரதி போன்ற 68 குற்றவாளிகளில் எவர்மீதும் நடவடிக்கை இல்லை.
மும்பையில் நடைபெற்ற வகுப்புகலவரங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை படுகொலை செய்த குற்றவாளி என நீதிபதி கிருஷ்ணா கமிஷனால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாதி பால்தாக்கரே மீது எந்த சட்டமும் பாயவில்லை.
சந்தேகத்தின் அடிப்படையில் ஜோடிக்கப்பட்ட வழக்கில் முஸ்லிம்களை வேட்டையாடும் காவல்துறைக்கு அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைகமிஷனால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்களை கைதுசெய்ய துணிவில்லை.
நன்றி
(சமநிலை சமுதாயம் ஆளூர் ஷாநவாஸ்)