சனி, 6 பிப்ரவரி, 2016

ஊழல் செய்த அதிகாரிகள் மீது வழக்கு கொடுக்கும்முன் அனுமதிவேண்டும்:

ஊழல் செய்த அதிகாரிகள் மீது வழக்கு கொடுக்கும்முன் அனுமதிவேண்டும்: அரசு உத்தரவு சரியா, தவறா? – பிரமுகர்கள் மக்கள் கருத்து

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசின் முன் அனுமதி பெறவேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் உத்தர விட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவு குறித்து பிரமுகர்கள், பொது மக்கள் என்ன கருதுகிறார்கள்?
வீணா வால்டர், (இல்லத்தரசி)
தமிழக அரசின் இந்த அறிவிப்பு நடுத்தர மற்றும் சாதாரண மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அரசின் லஞ்சம் மற்றும் ஊழல்களை வெளிக்கொண்டு வருவதில் பெரிய தடையாகவே இருக்கும். இதை மக்களின் உரிமையை பறிக்கும் செயலாகத்தான் பார்க்கிறோம்.
செல்வராஜ், (ஹோட்டல் உரிமையாளர்)
அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கு வதே குற்றம். அதிலும் அவர்களை காப் பாற்றும் விதமாக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்திருப்பது அதைவிடக் கொடுமை யான விஷயம். ஊழல் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்றால் பிறகு லஞ்ச ஒழிப்பு போலீஸார் எதற்கு? முதலில் இந்த விபரீதமான உத்தரவை அரசு வாபஸ் பெற வேண்டும்.
கே.ராஜலட்சுமி, (உயர் நீதிமன்ற வழக்கறிஞர்)
இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 14-ன்படி எல்லோரும் சமமாக பாவிக் கப்பட வேண்டும். ஆனால் அரசின் இந்த உத்தரவால் இனி அரசு அலுவலகங்களில் வெளிப்படையாகவே லஞ்சம் தலைவிரித் தாடும்.
கே.முஸ்தபா, (கணினி நிறுவனம் நடத்துபவர்)
நம் நாட்டில் பல மாநிலங்களில், அரசு உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர் கள் மீதான ஊழல் புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதுபோன்ற நீதிமன்றத்தை மக்கள் நலன் கருதி தமிழக அரசு ஏற்படுத்தும் என எதிர்பார்த்த நிலையில் இப்படியொரு பிற்போக்குத்தனமான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள் ளது. இதனால் அரசு ஊழியர்களிடம் லஞ்சம் வாங்கும் போக்கு மேலும் அதி கரிக்கும்.
எஸ்.என்.ஜனார்த்தனன், (தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர்)
அரசின் புதிய உத்தரவு நல்ல நடை முறைதான். முன்அனுமதி பெறாமல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேரடியாக நடவடிக்கை எடுக்கும்போது, புகாரில் சிக்கிய ஊழியருக்கு, அது தேவையற்ற மனஉளைச்சலை உருவாக்கக்கூடும். அந்த ஊழியரின் துறைத்தலைவரின் அனுமதியைப் பெற்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கையை தொடரலாம். முன்அனுமதி இல்லாமல் வழக்குப்பதிவு செய்வது தன்னிச்சையான நடவடிக்கை எடுக்க வழிவகுத்துவிடும்.
எம்.சேகரன், அனைத்து சேவை சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர், திருச்சி:
இந்த உத்தரவு லஞ்சம் வாங்குபவர் களைப் பாதுகாக்கவே பயன்படும். ஏற்கெனவே ஊழல் தடுப்பு மற்றும் கண் காணிப்புத் துறையினரின் செயல்பாடு களே பல்வேறு நிபந்தனைகளால் முடங்கி கிடக்கிறது. இனி, அச்சமின்றி லஞ்சம் வாங்கலாம் என்ற நிலை ஏற்படும்.
தாமஸ், ஆடிட்டர், வேலூர்:
தமிழக அரசின் புதிய அரசாணை தவறான அதிகாரிகளை ஊக்கப்படுத்தவே உதவியாக இருக்கும். நேர்மையான அதிகாரிகளை ஊக்குவிக்க முடியாத சூழல் உருவாகும். தவறு செய்பவர்களைப் பற்றித்தான் மேலிடத்தில் புகார் கொடுக் கிறோம். இந்தச் சுதந்திரத்தையும் இந்த உத்தரவு பறிப்பதாகவே உள்ளது.
எம்.யோகநாதன், சமூக ஆர்வலர், கோவை:
லஞ்சப் புகார்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை என்ற தனித்துறையே இருக்கும்போது, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது சரியானதாக இருக்காது. முன் அனுமதி பெற வேண்டு மென கட்டாயமாக்கினால் அதில் அரசி யல் தலையீடுகளைத் தவிர்க்க முடி யாது.
அ. பிரம்மா, வழக்கறிஞர் – திருநெல்வேலி
Screenshot_2016-02-06-11-51-31-570
குற்றச்செயல் புரிபவர் மீது ஊழல் புகார் வந்தால் உடனடியாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் மக்க ளையும், அரசு அதிகாரிகளையும் ஏமாற்றும் வகையில் இந்த அரசாணை உள்ளது.
கோ.சுகுமாரன், மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலர், புதுச்சேரி
ஊழல் வழக்குகளில் அதிகாரிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்யலாம். ஆனால், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்போது உயர் அதிகாரியிடம் முன் அனுமதி வாங்க வேண்டும் என்ற சட்டம் ஏற்கெனவே உள்ளது. அதை பயன்படுத்தி ஊழல் அதிகாரிகளை பாது காக்கும் வழக்கம் உள்ளது. தற்போது, அரசு ஊழியர்கள் வரையிலும் இந்த சலுகையை கொண்டு வந்துள்ளது தவறு
சு.ஆதிஜெகந்நாதன், சமூக ஆர்வலர், காரைக்குடி.
லஞ்சம் வாங்கும் நபரை கையும் களவுமாக பிடிக்கும் நிகழ்விலும்கூட உயர் அலுவலரின் அனுமதி தேவையெனில் இந்த உத்தரவு வரவேற்கத் தக்கதல்ல. ரசாயனப் பொடி வைத்துப் பிடிக்கும் நிகழ்வுகளின்போதும், அரசின் அனுமதி பெறவேண்டுமெனில் லஞ்சம் வாங்கும் நபர் எளிதில் தப்பிவிடுவதற்கு வாய்ப் புண்டு.
எல்.பிரபாகரன், கன்ஸ்யூமர் வாய்ஸ் பொருளாளர், சேலம்.
ஏற்கெனவே பல லஞ்ச வழக்குகளில் உரிய சாட்சியம், ஆவணங்களுடன் பிடிப்பட்டவர்கள் மீதான நடவடிக்கைக்கே தீர்வு காணப்படாமல் உள்ளது. மேலும், முன் அனுமதி அளிக்க கூடிய அரசு அதி காரிகளுடன் கைக்கோரத்துக் கொண்டு பட்டவர்த்தனமாகவே லஞ்ச பரிவர்த்தனை செய்யும் அபாயம் ஏற்படும்.