செவ்வாய், 12 ஏப்ரல், 2016

1914ல் நடந்த சம்பவத்திற்கு 102 ஆண்டுகளுக்கு பிறகு மன்னிப்பு கோரும் கனடா

376 பேருடன் கனடா சென்ற அகதிகளின் கப்பலை திருப்பி அனுப்பியதற்காக மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்டுரியோ தெரிவித்துள்ளார். 

1914-ம் ஆண்டு கோமாகட்டா மாரூ என்ற ஜப்பானிய கப்பலில் இந்தியாவைச் சேர்ந்த 376 பேர் கனடா நாட்டில் அடைக்கலம் கோரி சென்றனர். ஆனால் அகதிகள் தொடர்பான பாரபட்சமான சட்டங்களால் இந்திய அகதிகளுக்கு இடமில்லை என கனடா நாடு அறிவித்தது, இதனை தொடர்ந்து கோமாகட்டா மாரூ கப்பலும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. 

2 மாத பயணத்திற்கு பிறகு கொல்கத்தா வந்தடைந்த இந்த கப்பலை நோக்கி பிரிட்டன் ராணுவ வீரர்கள் சுட்டதில் அதிலிருந்த 19 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு உலகம் முழுவதும் பெரும் சர்ச்யை ஏற்படுத்தியது. அகதிகள் கப்பல் திருப்பி அனுப்பட்டதற்கு 102 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கோர கனடா அரசு முன்வந்துள்ளது. 

அடுத்த மாதம், 18-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தில் மன்னிப்பு கோர உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்டுரியோ தெரிவித்துள்ளார். கனடா அரசால் திருப்பி அனுப்பபட்ட கப்பலில் இருந்தவர்களில் பெரும்பாலனவர்கள் சீக்கியர்கள். தற்போது ஜஸ்டின் ட்டுரியோவின் அமைச்சரவையில் நான்கு சீக்கிய அமைச்சர்கள் உள்ளனர்.