செவ்வாய், 12 ஏப்ரல், 2016

வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் விபரீதம்:

அசாம் மாநிலத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்களை எச்சரிக்கும் நோகில் வானத்தை நோக்கி சுட்டதில் மேலே சென்ற உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர்.


 

 
அசாம் மாநிலத்தில் தின்சூயா மாவட்டத்தில் காவல் நிலையத்தில், கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட இரண்டுபேரை விடுதலை செய்யக் கோரி உள்ளூர் மக்கள் காவல் நிலையத்திற்க முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கைகளில் அரிவாள்,  முதலிய பங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.
 
அத்துடன் அவர்கள் காவல்துறையினரை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகின்றது. இதனால், போராட்டக்காரர்களை கலைக்கும் நோக்கில் காவல்துறையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
 
அப்போது, மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் துப்பாக்கி தோட்டா பட்டு, அந்த மின்கம்பி அறுந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களி மீது விழுந்தது. 
 
இதில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், சோகமும் நிலவியது.