செவ்வாய், 12 ஏப்ரல், 2016

இந்துத்துவா கொடுமை தாங்க முடியாமல் ரோஹித் வெமுலாவின் தாய் மதம் மாறினார்!.


418410-rohith-vemula-mother-ptiஹைதராபாத் : பல்கலைக்கழகத்தில் இருந்து அநீதியாக நீக்கப்பட்டதர்காக தற்கொலை செய்து கொண்ட ஆராய்ச்சி படிப்பு மாணவர் ரோஹித் வெமுலாவின் தாய் இந்து மதத்தில் இருந்து வெளியேறி புத்த நத்தை ஏற்றுக்கொண்டார்.
ஜாதிய அடக்குமுறைகள் மற்றும் அநீதிகளுக்கு எதிராக போராடி வந்தவர் ரோஹித் வெமுலா. இதனால் இவருக்கும் அகில பாரதீய வித்யார்த்தி பரிசத் (அப்வ்ப்) எனும் பாரதீய ஜனதாவின் மாணவர் அமைப்பிற்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
இந்நிலையில் பாஜக தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கல்வி அமைச்சர் ஸ்மிருதி ராணி மூலமாக ரோஹித் வேமுலாவை கல்லூரி விடுதியிலிருந்து வெளியேற்றியது. இதனால் மனமுடைந்த ரோஹித் வெமுலா கல்லூரி விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. அனைத்டூ மாணவர்களும் இந்த படுகொலைக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிகழ்வின் தொடர்ச்சியாகவே ரோஹித் வெமுலாவின் தாய் அம்பேத்கர் வழியில் புத்த மதத்திற்கு மாறியிருக்கிறார்.