சனி, 2 ஏப்ரல், 2016

ஆப்பிள் போன்று அவுட்சோர்சிங்கில் நுழையும் கூகுள்: யாருக்கு லாபம்?


dgnஆப்பிள் நிறுவனத்தைப் போன்று கூகுளும் விரைவில் தனது சாப்ட்வேர் சேவையை அவுட்சோர்ஸ்சிங் செய்ய உள்ளது. 
ஆப்பிள் நிறுவனம் தனது சாஃப்ட்வேர் சேவையை இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற அலுவலகங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்து வந்தது. அதுபோல் தற்போது இந்த சேவையை கூகுள் நிறுவனமும் அவுட்சோர்ஸ் செய்ய உள்ளது. 
 
கடந்த ஆறு மாதங்களாக இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்த கூகுள் நிறுவனம் அமெரிக்காவை இருப்பிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் காக்னிசன்ட் நிறுவனத்திற்கு இந்த வாய்ப்பை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் அதிகளவில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் இந்த வாய்ப்பை ஐபிஎம் மற்றும் ஆக்சென்சர் ஆகிய நிறுவனங்களுக்கும் கூகுள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்களில் அதிகளவில் இந்தியர்கள்தான் பணியாற்றி வருகின்றனர். ஆதலால், கூகுளின் இந்த அவுட்சோர்சிங் சேவையால் இந்தியர்கள்தான் அதிகளவில் பயன் அடைவார்கள். 
தகவல் தொழில்நுட்பத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் கூகுள் நிறுவனம் பல நூறு மில்லியன் டாலர்களை செலவழித்து வருகிறது. ஃபார்சூன் 500 நிறுவனத்திற்கு அதிகளவில் செலவழித்து வருகிறது. அவுட்சோர்சிங் செய்வது கூகுள் நிறுவனத்திற்கு ஒன்றும் புதிது கிடையாது. ஏற்கனவே, ஜென்பேக்ட் மற்றும் இன்போசிஸ் போன்ற நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் வழங்கியுள்ளது.