இந்து மதத்தை விட்டு…… வெளியேறுவதை தவிர…. வேறு வழியில்லை….. : திருமாவளவன் பரபரப்பு பேச்சு….!!..
விழுப்புரம் மாவட்டம் சேஷ சமுத்திரத்தில் தலித் சமூகத்தினருக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டு அங்கிருந்த தலித் மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டு தீக்கிறையாக்கப்பட்டது.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது…
தலித் மக்களுக்கு எதிரான இந்த வன்முறை வெறியாட்டத்தில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சி பின்னணியில் உள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு 70 குடும்பங்கள் உள்ள தலித் மக்களின் குடியிருப்பில் புகுந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டு தேரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
2016 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சாதி உணர்வை தூண்டிவிட்டு தலித் மக்களுக்கு எதிரான வெறுப்பை விதைக்கிறார்கள்.
காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க தவறினால், அனைத்து கட்சி தலைவர்கள் தங்களுடைய நிலைபாட்டை தெளிவுப்படுத்த தவறினால் சேஷ சமுத்திர மக்கள் இந்து மதத்தை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்
.