திங்கள், 4 ஏப்ரல், 2016

பத்திரிக்கை அறிக்கை


நபிகள் நாயகத்துடன் ஒப்பிட்டு பேசிய திமுக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று முஸ்லி்ம்கள் நம்புகின்றனர். முஸ்லிம்களிலேயே மிகப்பெரிய மகானையும் கூட அல்லாஹ்வின் தூதர் என்று எந்த முஸ்லிமும் நம்ப மாட்டார் நம்பக் கூடாது.
இந்த நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் கருணாநிதியை இறைத்தூதர் என்று இந்தக் கயவன் பேசியுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது. முஸ்லிம் சமுதாயத்தில் இறை நம்பிக்கையாளருடன் கூட கருணாநிதியை ஒப்பிட முடியாது எனும் போது நபிகள் நாயகம் போல் இறைத்தூதர் என்று கூறுவது முஸ்லிம்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்துவதாகும்.
அல்லாஹ்வின் தூதர் என்பதைத் தவிர்த்து நபிகள் நாயகத்தின் ஒழுக்கம், நாணயம் ,நேர்மை ,தியாகம், தன்னலமற்ற வாழ்வு அரசியல் என்று எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் கருணாநிதியோ மற்ற அரசியல் வாதிகளோ நபிகள் நாயகத்தின் கால் தூசுக்கு சமமானவர்களாக ஆகமுடியாது என்று நம்பும் முஸ்லிம்களின் நம்பிக்கையைக் கேலிக்கூத்தாக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
நபிகள் நாயகம் விஷயத்தில் முஸ்லிம்கள் கடுகளவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது உலகமே அறிந்து வைத்துள்ள உண்மையாகும்.
இதைக் கூட உணராமல் நாகராஜ் என்பவன் பேசியுள்ளதைக் கருணாநிதி கடுமையாக கண்டிக்க வேண்டும், தவறினால் கடுமையான விளைவுகளை திமுக சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கிறோம்.
இப்படிக்கு
M.முஹம்மது யூசூப்
மாநில பொதுச்செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்