செவ்வாய், 7 ஜூன், 2016

நோன்பு நேரம் 22 மணித்தியாலங்கள்

ஐரோப்பா கண்ட ஐஸ்லாந்து ( Iceland ) நாட்டில் ஒரு நாளைக்கான நோன்பு நேரம் 22 மணித்தியாலங்கள்
ஐரோப்பா கண்டத்திலுள்ள ஐஸ்லாந்து நாட்டில் நம் சகோதர சகோதரிகள் ரமழான் மாதத்தில் நோன்பு இருக்கும் நேரம் எவ்வளவு தெரியுமா? மொத்தம் ஒரு நாளைக்கு 22 (இருபத்திரண்டு) மணித்தியாலங்கள். சுப்ஹானல்லாஹ்!
அங்கு இரண்டு மணி நேர இடைவெளியில் மஃரிப் தொழுகை, இஷாத் தொழுகை அதனுடன் தராவீஹ் தொழுகை அடங்கலாக உணவு உட்கொள்ளுதல் என செய்து முடித்தாக வேண்டும்.
காரணம்,
சூரிய உதயம் அதிகாலை 3:40 இற்கும் சூரிய அஸ்த்தமனம் இரவு 11:30 இற்கும் ஏற்படுகிறது.
அதாவது,
சலாஹ் அல் பஜ்ர் நேரம் அதிகாலை 2:28
சலாஹ் அல் லுஹர் நேரம் மதியம் 1:34
சலாஹ் அல் அஷர் நேரம் மாலை 6:14
சலாஹ் அல் மஃரிப் நேரம் இரவு 11:10
சலாஹ் அல் இஷா நேரம் இரவு 12:29
# சில_நாடுகளில்_ஒரு_நாளுக்கான_நோன்புநேரங்கள்