புதன், 22 ஜூன், 2016

ஆப்பிள் டெவலப்பர் மாநாட்டிற்கு தேர்வான 9 வயது இந்திய வம்சாவளி மாணவி




இந்திய வம்சாவளியை சேர்ந்த அன்விதா விஜய் (Anvitha Vijay) என்னும் 9 வயது மாணவி சான் பிரான்சிஸ்கோவில் நடக்கும் ஆப்பிள் டெவலப்பர் மாநாட்டிற்கு தேர்வாகியுள்ளார்.

அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் வருடம் தோறும் உலகில் சிறந்து விளங்கும் டெவலப்பர்களை தேர்வு செய்து உதவித்தொகை (scholarship) கொடுத்து கௌரவித்து வருகிறது. அதன்படி இந்த வருடமும் 350 பேர் தேர்வாகியுள்ளனர், அதில், 120 பேர் 18 வயதிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மெச்சும் வகையில் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி மாணவி அன்விதா விஜயும் (வயது 9) ஒருவர்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன், ஐ பேட் ஆகியவற்றில் ஆப்ஸ்-களை வடிவமைப்பதில் சிறந்து விளங்கிய அன்விதா விஜய் இந்த வருடத்திற்கான இளம் டெவலப்பர் என்னும் முறையில் சான் பிரான்சிஸ்கோவில் நடக்கும் ஆப்பிள் டெவலப்பர் மாநாட்டில் பங்கேற்கிறார். மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக்கை விரைவில் சந்திக்கும் கனவில் உள்ளார்.



இதை பற்றி கருத்து தெரிவித்துள்ள அன்விதா விஜய், Youtube-ல் உள்ள இலவச பயிற்சிகள் (free coding tutorials) மூலம் இது சாத்தியமானது எனவும் முதலில் கடினமாக தெரிந்த கோடிங் (coding) பின்னர் எளிதாக மாறியதாக தெரிவித்துள்ளார். பல்வேறு ஆப்ஸ்-களை வடிவமைத்துள்ள அன்விதா, குழந்தைகள் மேம்பட்டிற்காகவும் ஒரு ஆப்பை வடிவமைத்துள்ளார்.

100 மிருகங்களின் ஒலி மற்றும் புகைப்படம் மூலம் விலங்குகளை எளிதில் அடையாளம் காணும் Smartkin’s Animals என்னும் ஆப் மூலம் அறியப்பட்ட அன்விதா விஜய். குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகவும் ஒரு ஆப்பை வடிவமைத்து வருகிறார்.