புதன், 22 ஜூன், 2016

தாழ்த்தப்பட்ட மக்களை பன்றியுடன் ஒப்பிட்ட பாஜக எல்.எல்.ஏ


மும்பையின் தானே நகரில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி துவக்க விழாவில் பாஜக எம்எல்ஏ ரவீந்திர சவான், தலித்துகளை பன்றிகளுடன் ஒப்பிட்டு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களை பன்றியுடன் ஒப்பிட்ட பாஜக எல்.எல்.ஏ
பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அடிக்கடி சர்ச்சை எழுப்பும் விதமாக பேசுவது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏ ரவீந்திர சவான், தலித்துகளை பன்றிகளுடன் ஒப்பிட்டிருக்கிறார்.

தானேவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரவீந்திர சவான், “ஒருமுறை அபிரஹாம் லிங்கன், சாக்கடையில் விழுந்த பன்றியை பிடித்து, அதை கழுவினார். லிங்கனைப் போல, பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸும் தலித்துகளை உயர்த்த கடுமையாக உழைக்கிறார்கள்.” என்றார்.

இந்தப் பேச்சுக்கு தலித் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சவான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அமைப்புகள் கேட்டுள்ளன.

மேலும் என்சிபி என்னும் அமைப்பு, பன்றிக்கு பெயரிடும் சடங்கை நடத்தி, ரவீந்திர சவான் என்று பெயரிட்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.