பாஜக ஆட்சி செய்து வரும் ராஜஸ்தானில் 'பசு பாதுகாப்பு மையங்களில் நடைபெற்றுள்ள பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஊழலை வெளிக் கொண்டு வந்துள்ளது ஏசிபி. இது வரை எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோசோலைகளில் அடி மாடுகளை விலை கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். ஒரு மாட்டை இரண்டாயிரத்துக்கு வாங்கினால் இவர்கள் கணக்கில் எழுதுவது 4000க்கு மேல். மேலும் மாடுகளுக்கு போட வேண்டிய தீவனங்கள் தரமற்றவையாக இருந்ததால் சில மாதங்களிலேயே பசுக்கள் இறந்து விடுகினறன. ஆய்வின் முடிவில் இதையும் கண்டு பிடித்துள்ளார். மேலும் பல கோடி ரூபாய்க்கு போலியான பில்களையும் தயார் செய்துள்ளனர்.
ராஜேஷ்யம் ஷைனி, ராஜேந்தர் ஷைனி, ரோஷன் தன்வார், ரமேஷ் தன்வார், கன்ஷியாம் ஷைனி, மஹேந்திர ஷைனி, ஜேதே ராம் போன்றோர் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. section 13(1)(D) of Prevention of Corruption Act and also under section 420 (cheating), 466 (Forgery for record) 468 (Forgery for purpose of cheating), 471 (Using a forged document as genuine) and 120-B (Criminal conspiracy) of IPC.
பசுவை உண்மையாக பக்தியினால் வணங்கக் கூடிய இந்துக்கள் யாரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தங்கள் வணக்கத்தை செலுத்தி வருகின்றனர். மற்ற மதத்தவர்கள் மேலும் தலித்கள் மாட்டுக் கறி சாப்பிட்டால் பொங்கி எழக் கூடியவர்கள்தான் ஊழல் செய்து இன்று காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்துத்வாவாதிகளுக்கு பசு மீது பக்தி எல்லாம் கிடையாது. பசுவின் பெயரை வைத்து கொள்ளையடிக்க வேண்டும். அப்பாவி இந்துக்களை ஏமாற்றி பணம் வசூலிக்க வேண்டும். இதற்காகத்தான் இவர்கள் வன்முறையைக் கையிலெடுப்பது.
தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
26-05-2016
டைம்ஸ் ஆஃப் இந்தியா
26-05-2016
@Suvanapriyan