செவ்வாய், 7 ஜூன், 2016

மதுரையில் தொடரும் மர்மம் .. ?


மதுரை உமர் பாரூக் கைது ...
வருடம் ஒரு முறை அல்லது வருடம் இரண்டு முறை
பட்டாசு வெடிக்கும் அந்த பட்டாசுக்கு காவல்துறையும் , ஊடகமும் சூட்டிய பெயர் வெடிகுண்டு ....
வெடிகுண்டு என பெயர் சூட்டினால் தானே
முஸ்லீம்களை கைது செய்யலாம் ....
தமிழக காவல்துறைக்கு எமது கேள்விகள்
கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரையில் மட்டும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பட்டாசுகள் (குண்டுகள்) வெடித்தாக பல இஸ்லாமிய இளைஞர்களை மதுரை காவல்துறை கைது செய்து சிறைக்கு அனுப்பி உள்ளீர்கள் அவர்கள் எல்லாம் உண்மை குற்றவாளிகளா ?
காவல்துறை கைது செய்யும் போது எல்லாம் எம்மை போன்றவர்கள் ஏன் கைது செய்தீர்கள் என காவல்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினால் உண்மையான குற்றவாளிகளை தான் நாங்கள் கைது செய்தோம் ஆதாரங்கள் உள்ளது என சொல்லுவது ஏன் ?
ஆதாரத்துடன் தான் கைது செய்தீர்கள் என்றால் மீண்டும் மீண்டும் ஏன் இந்த சம்பவங்கள் நடக்கின்றது ?
அப்போ கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களா ? ...
வன்முறையோ , தீவிரவாதமோ நமது பணி இல்லை என சமுதாயத்தை அரசியல் ரீதியாக களம் அமைத்து போராடி சென்ற ஷஹித் பாபாவின் அரசியல் வழியை மாணவர்களாகிய நாங்கள் பின்பற்றி வருவது காவல்துறைக்கு நெருடல்களை ஏற்படுத்துகின்றதா ?
ரமலான் நோன்பு ஆரம்பித்த உடன் மதுரை உமர் பாரூக்கை காவல்துறை கைது செய்து அழைத்து சென்றுள்ளது ஏன் கைது செய்தீர்கள் என மதுரை சட்டம் ஒழுங்கு அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது நாங்கள் கைது செய்யவில்லை என சொல்லி விட்டார்கள் சி.பி.சிஐடி அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை என்ன செய்ய முடியும் !
ஆம் சமுதாயமே ....
சமுதாயத்தில் கேட்க ஆள் இல்லை யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் யாரை வேண்டுமானாலும் விசாரனை என அழைத்து சென்று கொடுமை படுத்தலாம் கேட்டால் குண்டு வெடிப்பு வழக்கு என பழி சுமத்தலாம் இது தமிழக காவல்துறையின் வரலாறு ...
இந்த அமைப்பு எங்க ஆள் இல்லை என தட்டிகழிக்கலாம் அந்த அமைப்பு எங்களுக்கு தெரியாது என மழுப்பலாம் எப்படியோ சமுதாயத்தை சேர்ந்த சகோதரர்கள் சிறைக்கு செல்வதும் , தண்டனை வாங்குவதும் வாடிக்கையான சம்பவமாக தமிழ்நாட்டில் தொடர்கின்றது ..
தமிழக காவல்துறையே ரமலான் மாதம் என கூட பார்க்காமல் பொய்யான வழக்கில் கைது செய்த மதுரை உமர் பாரூக்கை உடனே விடுதலை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக கோருகின்றோம் தவறும் பட்சத்தில் பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உமர் பாரூக் விடுதலை செய்ய மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் முற்றுக்கை போராட்டத்தை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக களமாடுவோம் ...
சமுதாயத்தின் விடியல்களே
பாபாவின் மாணவர்களே
அன்பு தம்பிமார்களே
அணி திரள்வோம் ....
அன்புடன்
தடா ஜெ.அப்துல்ரஹிம்
இந்திய தேசிய லீக் கட்சி
மாநில தலைவர் ..