மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடத்தப்பட்டது போலி என்கவுண்டர் என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
இந்த என்கவுண்டர் சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மார்கண்டேய கட்ஜூ வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், போபாலில் சிமி தீவிரவாதிகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது திட்டமிட்ட என்கவுண்டர் என குற்றம் சாட்டியுள்ளார்.
என்கவுண்டரில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாமல், அவர்களுக்கு உத்தரவிட்ட உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என குறிப்பிட்டுள்ளார். போலி என்கவுண்டரில் தொடர்புடைய அனைவருக்கும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் மார்கண்டேய கட்ஜூ குறிப்பிட்டுள்ளார்.
நீதிக்கு புறம்பான இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்க தண்டனை உறுதி என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.