வங்கக்கடலில் வர்தா புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வர்தா என பெயரிடப்பட்ட இப்புயல் தற்போது உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வர்தா புயல் விசாகப்பட்டினத்தில் இருந்து 1,060 கிமீ தொலைவில் தற்போது மையம் கொண்டுள்ளது. முதலில் வடக்கு நோக்கி நகர்ந்து, பின்னர் வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆந்திராவில் வரும் 11- ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பதிவு செய்த நாள் : December 08, 2016 - 09:52 AM