வெள்ளி, 9 டிசம்பர், 2016

பே.டி.எம் என்றால் என்ன?... ராகுல்காந்தி புது விளக்கம்

பேடிஎம்(PAYTM ) என்பதற்கு பே டூ மோடி என்பதே பொருளாகும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
மின்னணு பணப்பரிவர்த்தனைக்கு மாறுமாறு பிரதமர் மோடி தொடர்சியாக கோரிக்கை விடுத்து வருகிறார். இந்நிலையில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, பணமில்லா வர்த்தகத்தை நோக்கி மத்திய அரசு சென்று கொண்டிருப்பதாகவும், இதனால் ஏழைகள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
பேடிஎம்(PAYTM ) என்றால் பே டூ மோடி என விமர்சித்த ராகுல்காந்தி, அரசின் திட்டம் சிலர் மட்டுமே பெரிய அளவிலான லாபத்தை பெற வழி ஏற்படுத்தியிருக்கிறது என குற்றஞ்சாட்டினார். இதனால் விவசாயிகள், மீனவர்கள், தினக்கூலிகள் போன்ற அப்பாவி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.