செவ்வாய், 18 ஜூன், 2019

நீட் விலக்கு கோரிய முதல்வரின் செயலை விமர்சித்து முரசொலியில் கட்டுரை....! June 18, 2019


Image
நீட் தேர்வு முடிந்த பிறகு, அதில் இருந்து விலக்கு அளிக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதை முரசொலி நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து முரசொலி நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், ஈயம் பூசிய மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும் என்ற கவுண்டமணி டயலாக் தான் முதலமைச்சர் பழனிசாமியின் பாணி என கூறப்பட்டுள்ளது.  நீட் தேர்வு முடிந்த பிறகு, நீட் தேர்வில் விலக்கு முதல்வர் கேட்டிருக்கிறார்.
எவ்வளவு பெரிய புத்திசாலியை தமிழ்நாடு முதலமைச்சராகப் பெற்றிருக்கிறது எனவும் அதில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.  உண்மையில் அக்கறை இருக்குமானால் ஜனவரி மாதமே அதற்கான வேலைகளைத் தொடங்கி இருக்க வேண்டும் என்றும்  டெல்லிக்கு  படை எடுத்திருக்க வேண்டும் எனவும் முரசொலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதோ ஒப்புக்கு ஒரு மனுவை எழுதி, அதில் தமிழ்நாட்டு பிரச்சனைகள் அத்தனையும் வரிசைப்படுத்தி தனது கடமை முடிந்து விட்டது என முதலமைச்சர் நினைப்பதாக கூறியுள்ள முரசொலி நாளிதழ், நடப்பதே மனு ஆட்சி , இங்கு சமூகநீதி கொள்கைகளின் கதி என்னவாகும் என்று தெரியாதா? மனு கொடுப்பதால் என்ன ஆகப்போகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு உயர்வு இல்லை என்ற சூழ்நிலை தொடருமானால், நீட் பலி பீடங்களில் மாணவிகள் அல்ல இந்த அரசுகளும் பலியாகும் நாள் தூரத்தில் இல்லை எனவும், அந்த கட்டுரையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.