செவ்வாய், 13 டிசம்பர், 2016

வர்தா புயல் கரையைக் கடந்தாலும் மழைக்கு வாய்ப்பு

வர்தா புயல் கரையைக் கடந்தாலும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் புரட்டிப் போட்ட வர்தா புயல், வலுவிழந்து காற்றழுத்தமாக தற்போது பெங்களூருவை மையம் கொண்டுள்ளது. அதனால் அங்கு நேற்றிரவு முதல் அங்கு மிதமான மழை பெய்து வருகிறது. கர்நாடகாவின் தெற்குப் பகுதி உள்மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனிடைய, அங்கு மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை மைய விஞ்ஞானி கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வர்தா புயல் கரையைக் கடந்தாலும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு கர்நாடகாவின் தென் மாவட்டங்களிலும், பெங்களூரூவிலும் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: