செவ்வாய், 13 டிசம்பர், 2016

தங்கள் கட்சியின் நிறுவனர்,தலைவர் எம்.ஜி.ஆரின் வழியில் நடப்பதே நாட்டுக்கு நல்லது.

முதலமைச்சர் பன்னீர் செல்வம் அவர்களுக்கு,
உங்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களிடம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது கேட்கப்பட்ட கேள்வியும் அவர் கூறிய பதிலும்,
''கேள்வி : உங்கள் மதம் இந்து தானே ?
எம்.ஜி.ஆர் பதில் : இல்லை, நான் இந்து இல்லை; எனது மதம் திராவிட மதம். திராவிட மதம் என்றுபதிவு செய்யுங்கள்.''
எம்.ஜி.ஆரின் இந்த நிலைப்பாட்டை தற்போதைய முதலமைச்சர் நினைவில் கொள்ளவேண்டும்.
மேலும் இந்தியாவை அழைக்கும் போது ''இந்திய துணைக்கண்டம்'' என்கிற வார்த்தையைத்தான் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பயன்படுத்திவந்தார் என்பதும் முக்கியமானது.
''சர்வ சுதந்திரமாய் செயல்பட'' வாய்ப்பை பெற்றிருக்கும் தாங்கள் இந்த குறிப்பிட்ட விடயங்களில் தங்கள் கட்சியின் நிறுவனர்,தலைவர் எம்.ஜி.ஆரின் வழியில் நடப்பதே நாட்டுக்கு நல்லது.
(தகவல் : கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் 11.12.2016 அன்று திருப்பூர் மாவட்ட நிதியளிப்பு கூட்டத்தில் பேசியதில் இருந்து)

Related Posts: