கோவிட் -19 பாதிப்புக்கு எதிரான தடுப்பு மருந்தாகவும், சிகிச்சை மருந்தாகவும் இன்று உலகளவில் பேசப்பட்டு வரும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கான தடை உத்தரவை நீக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
செவ்வாயன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,” ஹைட்ராக்ஸி குளோரோகுயின் தொடர்பான தனது கோரிக்கையை இந்தியா கவனிக்கவில்லை எனில், ‘பதிலடி’ குறித்து அமெரிக்கா ஏன் யோசிக்கக் கூடாது என்று ட்வீட் செய்தார்.
அதன் பின்னர், இந்தியா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர்,”கோவிட்-19 நோயால், அதிகம் பாதிப்படைந்த நாடுகளுக்கும், இந்தியாவின் திறன்களைச் சார்ந்து இருக்கும் அண்டை நாடுகளுக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து விநியோகத்தை இந்தியா உறுதி செய்யும்” என்று தெரிவித்தார்
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்றால் என்ன, அது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? இதுநாள் வரையில், மலேரியா நோயைக் குணப்படுத்துவதற்காக இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குளோரோகுயினைக் காட்டிலும் குறைவான நச்சுத்தன்மையாகக் கருதப்படுவதால், முடக்கு வாதம், லூபஸ் போன்ற நோய்களுக்கும் மருத்துவர்கள் இதனை பரிந்துரைக்கின்றனர்.
இந்தியாவில் இந்த மருந்தை தயாரிப்பது யார்?
பிப்ரவரி 2020 வரையிலான முந்தைய 12 மாதங்களில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சந்தை அளவு சுமார் 152.80 கோடி ரூபாய் என்று ஆராய்ச்சி நிறுவனமான ஏ ஐ ஓ சி டி அவாக்ஸ் பார்மட்ராக் தெரிவிக்கின்றது.
பிப்ரவரி 2020 வரையிலான முந்தைய 12 மாதங்களில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் சந்தை அளவு சுமார் 152.80 கோடி ரூபாய் என்று ஆராய்ச்சி நிறுவனமான ஏ ஐ ஓ சி டி அவாக்ஸ் பார்மட்ராக் தெரிவிக்கின்றது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இப்கா ஆய்வகம், HCQS, HYQ என்ற பிராண்டின் வாயிலாக சந்தையில் கிடைக்கும் 82 சதவீத மருந்தை கட்டுபடுத்துகின்றன. எவ்வாறாயினும், அதன் தயாரிப்புகளில் சுமார் 80% ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் காடிலா ஹெல்த்கேர் (ஜைடஸ் காடிலா) Zy Q என்ற பிராண்டைத் தயாரிக்கிறது. இதன் சந்தையின் அளவு எட்டு சதவீதமாகும். வாலஸ் பார்மாசூட்டிகல்ஸ் (OXCQ), டோரண்ட் பார்மாசூட்டிகல்ஸ் (HQTOR) ஓவர்சீஸ் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் (CARTIQUIN) ஆகியவை சிறிய பங்குகளைக் கொண்டுள்ளன.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் – கோவிட் 19 இணைப்பு என்ன?
கடந்த மாதம் சர்வதேச ஆண்டிமைக்ரோபையல் ஏஜெண்ட்ஸ் என்ற ஆய்வு இதழில்(ஐ.ஜே.ஏ.ஏ) , பிரெஞ்சு நாட்டு விஞ்ஞானிகள் இவ்வாறு தெரிவித்தனர் “ இருபது நோயாளிகள் சிகிச்சை பெற்றன…வைரஸ் கேரேஜ் (viral carriage) கணிசமான குறைந்து காணப்படுகின்றன ….. சிகிச்சை அளிக்கப்படாதவர்களுடன் ஒப்பிடும் போது, சிகிச்சை அளிக்கப்பட்டவர்கள் மிகக் குறைந்த சுமக்கும் காலத்தைக் (lower average carrying duration) கொண்டிருக்கின்றனர்…….. அஜித்ரோமைசின் (ஆண்டிபயாடிக்) மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயினில் வைரஸ் ஒழிப்புக்கு மிகவும் திறமையானது. ” என்று தெரிவித்திருந்தது.
கோவிட்-19 சிகிச்சை தொடர்பான உறுதியான முடிவை எடுக்க இந்த ஆய்வு போதுமானதாக இல்லை என்று அப்போதே பலர் கருத்து தெரிவித்திருந்தனர் . ஏப்ரல் 3 ம் தேதி, ஐ.ஜே.ஏ.ஏ அமைப்பின் தலைமை நிறுவனமான இன்டர்நேஷனல் சொசைட்டி ஆஃப் ஆன்டிமைக்ரோபியல் கீமோதெரபி, “இந்த ஆய்வு சமூகத்தின் எதிர்பார்க்கப்பட்ட தரத்தை பூர்த்தி செய்யவில்லை,” என்று வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தது .
இருப்பினும், மார்ச் 21 தேதிமுதல், அமெரிக்கா அதிபர் டிரம்ப் இந்த மருந்தை “கேம் சேஞ்சர்” என்று அழைக்கத் தொடங்கினார். அது மட்டுமல்லாமல், இதை தீவிரமாக மக்கள் மனதில் பதிய தொடங்கிவிட்டார்.
கடந்த மாத இறுதியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்)கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் சுகாதார ஊழியர்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்த பரிந்துரைத்தது. மேலும் உறுதிப்படுத்தப்பட்டகோவிட் -19 நோயாளிகளோடு தொடர்பில் இருந்த வீட்டு உறுப்பினர்களுக்கு, இந்த மருந்தை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு அனுமதித்தது.
எவ்வாறாயினும், மருத்துவரின் அனுமதி இருந்தால் மட்டுமே மருந்தை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், தவறான பாதுகாப்பு உணர்வை யாரும் ஏற்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கையையும் அரசாங்கம் விடுத்தது.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உண்மையில் பயனுள்ளதா?
கோவிட் -19 சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் குளோரோகுயின் ஆகியவற்றின் செயல்திறன் குறித்து இரண்டு பெரிய சோதனைகள் நடைபெற்று வருகின்றன. உலக சுகாதார அமைப்பு (WHO) நடத்தும் ஒற்றுமை சோதனையில் (இதில், இந்தியாவும் இனைந்து செயல்படுகிறது), உலகளவில் ஒரு பொதுவான நெறிமுறையைப் பின்பற்றி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை நோயாளிகளுக்கு கொடுத்து வருகின்றனர். இரண்டாவதாக, வெல்கம் டிரஸ்ட் மற்றும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை துணையோடு குளோரோகுயின் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது வரை, இந்த மருந்துகள் வைரஸுக்கு எதிராக எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று முடிவும் இல்லை என்று வெல்கம் டிரஸ்ட் / டிபிடி இந்தியா கூட்டணியின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஷாஹித் ஜமீல் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில்,“மருந்துகளைச் சோதிக்கப் பயன்படுத்தப்படும் சீரற்ற சோதனை நெறிமுறையின்படி, இந்த இரண்டு மருந்துகளும் மிகப் பெரிய எண்ணிக்கையிலான நோயாளிகளிடம் சோதிக்கப்படுகின்றது. சோதனைகளின் முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை” என்று தெரிவித்தார்.
சுகாதாரப் பணியாளர்கள் போன்ற அதிக வெளிப்பாடு சூழ்நிலைகளில் உள்ளவர்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் / குளோரோகுயின் மருந்தை ஒரு தடுப்பு நடவடிக்கையாக எடுத்துக்கொண்டால், நன்றாக இருக்கும். ஆனால், இந்த மருந்துகள் பாதுகாக்கும் என்று கண்மூடி தனமாக பொது மக்களிடம் கொண்டு செல்வது சரியில்லை. சில நேரங்களில் இந்த மருந்து ஏதேனும் தீங்கு விளைவிக்கும்”என்று டாக்டர் ஜமீல் தெரிவிக்கின்றார் .
மருந்து உட்கொள்ளும் மற்ற நோயாளிகள் எவ்வாறு பாதித்துள்ளனர்? ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பின், அமெரிக்க மக்கள் பீதியின் பொருட்டு அதிகளவில் மருந்தை வாங்க ஆரம்பித்திருக்கின்றனர். இதன் விளைவாக இந்தியாவின் ஸ்டாக்குகளில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. முடக்கு வாத நோய்க்கான ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் ஆலோசகர் டாக்டர் நேவல் மெண்டிராட்டா கூறுகையில், ஸ்டாக் காலியாவது குறித்து தனது நோயாளிகள் ஏற்கனவே புகார் செய்யத் தொடங்கிவிட்டனர். கீல்வாதம், லூபஸ் போன்ற பிரச்சனைகளை கொண்ட நோயாளிகள் “சில நாட்கள் வேண்டுமானாலும் மருந்து உட்கொள்ளாமல் இருக்கலாம். இருப்பினும், நீண்ட நாட்கள் இல்லாமல் நிர்வகிப்பது மிகவும் கடினம்” என்று தெரிவித்தார்.
ஐ.சி.எம்.ஆர்-ன் அறிவிப்புக்குப் பின், இந்தியாவில் பல்வேறு நோயாளிகளும், சுகாதார வல்லுநர்களும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பதுக்குவதில் ஆர்வம்காட்டி வருகின்றனர் . 1 எம்.ஜி. நிறுவனர் பிரசாந்த் டாண்டனின் கூறுகையில்,”இதற்கு முன்னாளில் ஒருபோதும் மருந்தைப் பயன்படுத்தாத சில நோயாளிகள் கூட, இ-மருந்தகத்திலிருந்து பெற முயற்சித்து வருகின்றனர், என்று தெரிவித்தார்.
தற்போது, ஹைட்ராக்ஸி குளோரோகுயின், மருந்து பாதுக்கப்பு அட்டவணையில் H1 நிலையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது மருந்து தேவைப்படும் நோயாளிகள் அதை வாங்குவதற்கு ஒவ்வொரு முறையும், மருத்துவரின் அனுமதி சீட்டைக் கட்டாயம் பெற வேண்டும்.
சிக்கலைத் தீர்க்க மருந்து நிறுவனங்கள் என்ன செய்கின்றன?
இப்கா கூட்டு நிர்வாக இயக்குனர் அஜித் குமார் ஜெயின் கூறுகையில், அரசாங்கத்தின் பெரும்பாலான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், உற்பத்தியை அதிகரிக்கும் திறன் எங்களிடம் உள்ளது. இதுவரை எங்கள் ஒட்டுமொத்த உற்பத்தியில் வெறும் 10 சதவீதம் மட்டுமே உள்நாட்டு சந்தையில் பயன்படுத்தப்பட்டது” என்று தெரிவித்தார்.
இருப்பினும், மருந்து தவறாகப் பயன்படுத்தாமல் இருக்கவும், பதுக்கப்படாமலும் இருக்கவும், நாடு முழுவதும் உள்ள “தேர்ந்தெடுக்கப்பட்ட” மருந்தகங்களில் மட்டும் ஹைட்ராக்ஸி குளோரோகுயினைக் கிடைக்க நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார் .
ஜைடஸ் காடிலா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,”ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உற்பத்தி திறனை மாதத்திற்க மூன்று டன்களில் இருந்து, 20-30 டன்னாக உயர்த்தியுள்ளோம். இனி வரும் காலங்களில் “தேவை ஏற்பட்டால் மாதத்திற்கு சுமார் 40-50 டன்களாக உற்பத்தி செய்வோம்” என்று தெரிவித்தார்.
credit ns7.tv