தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படுகிறது. அதன்படி மக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்க, ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் சேலத்தில் 5 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே காய்கறி வாங்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்புக்கு வேலூரில் 45 வயது நபர் உயிரிழந்ததாக அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆகையால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே இதுவரை 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது. பல்வேறு மாநில அரசுகள், வல்லுணர்களின் கோரிக்கையை ஏற்க திட்டமிடப்பட்டுள்ளது.
credit ns7.tv
credit ns7.tv