கொரோனா வைரஸ் பரவலால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகள் தவிர வேறெந்த நிகழ்விற்கும் வெளியே செல்வதில்லை. நல்லது, கெட்டது என்று வரும் போது உறவினர்களுக்கு தோள் கொடுக்கும் நிலை இன்று இந்தியாவில் இல்லாதது வருத்தம் அளிக்கும் ஒன்றாக தான் இருக்கிறது.
ஆனாலும் அக்கம் பக்கத்தார் எதுற்கு உள்ளார்கள் என்று கேள்வியுடன் மாபெரும் உதவியை செய்துள்ளனர் இந்தூரில் இருக்கும் இஸ்லாமியர்கள்.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ளது தெற்கு தோடா என்ற இடம். இந்த இடத்தில் வசித்து வருகிறார் 65 வயதான திரௌபதி பாய் என்ற 65 வயது மூதாட்டி. பக்கவாதத்தால் பாதித்த மூதாட்டி தன்னுடைய மகனுடன் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக அவர் இறந்துவிட்டார். லாக்டவுனில், அவரின் இறுதி சடங்கினை நடத்த அவரின் மற்ற மகன்கள் தெற்கு தோடாவிற்கு வர இயலவில்லை. உறவினர்கள் யாரும் இன்றி திண்டாடி போனார் திரௌபதியின் மூத்தமகன்.
इंदौर के नार्थ तोड़ा क्षेत्र में एक बुजुर्ग हिन्दू महिला द्रोपदी बाई की मृत्यु होने पर क्षेत्र के मुस्लिम समाज के लोगों ने उनके दो बेटों का साथ देकर उनकी शवयात्रा में कंधा देकर व उनके अंतिम संस्कार में मदद कर जो आपसी सदभाव की व मानवता की जो मिसाल पेश की,वो क़ाबिले तारीफ़ है।
1/2
இதைப் பற்றி 2,578 பேர் பேசுகிறார்கள்
இதனை அறிந்த அக்கம் பக்கத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் திரௌபதியின் மகனுக்கு உதவிகள் செய்ததோடு மட்டுமின்றி, 2.5 கி.மீ அப்பால் இருக்கும் இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று தகனமும் செய்துள்ளனர். இந்த மத நல்லிணக்கம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. கொரோனா காலத்தில் எங்கும் செல்லவே அச்சமாயிருக்கும் இந்த பொழுதில் முகத்தில் முகக்கவசங்கள் அணிந்து கொண்டு அவருக்கு இறுதி சடங்கினை செய்துள்ளனர் அம்மக்கள். இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல் நாத்.
credit indianexpress.com