சனி, 13 அக்டோபர், 2018

​உலகம் முழுவதும் முடங்குகிறதா இணைய சேவை? October 13, 2018

Image

உலகம் முழுவதும் இணைய சேவை அடுத்த சில நாட்களுக்கு பாதிக்கப்படும் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள்.

உலகம் முழுவதும் முடங்குகிறதா இணையம்?

► இணையத்தளங்களை நிர்வகிக்கும் ICANN நிறுவனம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.

► இணையவழி தாக்குதல்களை சமாளிப்பதற்காக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்.

► ICANN நிறுவனத்தின் பராமரிப்பு  பணி நிறைவு பெற்றால் இணைய சேவை உலகம் முழுவதும்  பாதுகாப்பாக வழங்கப்படும்.

► பராமரிப்பு  பணிகள் மேற்கொள்ளும் சமயத்தில் உலகில் பல இடங்களில் இணைய சேவை பாதிக்கப்படும்.

► இணைய சேவை நிறுவனங்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்பட்சத்தில் சேவை பாதிக்காப்படாது.

► பராமரிப்பு பணி தொடங்கியதிலிருந்து 48 மணி நேரத்திற்கு இணையம் வழி வர்த்தகம் பாதிக்கப்படும்.