ஞாயிறு, 14 அக்டோபர், 2018

இந்தியாவில் அதிகரித்து வரும் சிசேரியன் பிரசவங்கள்! October 14, 2018

Image

இந்தியாவில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரித்து வருவதாக LANCET ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்த கூடுதல் தகவல்களை இனி காணலாம்.

2005-2015 - காலகட்டத்தில் இந்தியாவில் சிசேரியன் பிரசவங்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக 2014-15ல் தமிழ்நாட்டில் 31.4 % சிசெரியன் பிரசவங்கள் நடந்துள்ளதாக அறிக்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு நாட்டில் 10 - 15 % சிசேரியன் பிரசவங்கள் இருக்கலாம் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. 
இந்நிலையில் 2015ம் ஆண்டு மட்டும் உலகெங்கும் சிசெரியன் மூலம் பிறந்த குழந்தைகளில் எண்ணிக்கை - 2.9 கோடி ஆகும். 

மேலும் தெலுங்கானா, திரிபுரா, மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கோவா ஆகிய பகுதிகளில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இது ஒருபுறமிருக்க 2014-15ல் தெலுங்கானாவிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் மட்டும் 74.9 % சிசேரியன் பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் முக்கியமாக அரசு மருத்துவமனைகளை விடத் தனியார் மருத்துவமனைகளில் சிசெரியன் பிரசவங்கள் அதிகரிப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.