ஓசூர் அருகே விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டுயானைகளை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உப்பர்தம்மண்டரப்பள்ளி கிராமத்தில் விளைநிலங்களுக்குள் புகுந்த 12 காட்டுயானைகள் பயிர்களை சேதப்படுத்தின. இதனால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள், காட்டுயானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
விளைநிலங்களுக்கு அவ்வப்போது புகுந்துவிடும் காட்டுயானைகளை வனத்திற்குள் விரட்டினாலும் அவை மீண்டும் மீண்டும் ஊருக்குள் நுழைந்துவிடுவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.