ஞாயிறு, 11 டிசம்பர், 2016

அதிதீவிர புயலாக மிரட்டும் ’வர்தா’.. வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள வர்தா புயல் வலுவடைந்து அதிதீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த புயல் நெல்லூரில் இருந்து 710 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகரும் வர்தா புயல், சென்னை - ஆந்திர மாநிலம் ஓங்கோல் இடையே வரும் 12ம் தேதி மாலை வர்தா புயல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம், ஆந்திரா‌ ஒட்டிய கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. வர்தா புயல் காரணமாக தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் வட கடலோர தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், வட கடலோர தமிழகத்தில் 36 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.