புதன், 3 மே, 2017

சாலையில் நடந்து செல்லும்போது பெண்கள் செல்போன் பேசினால் 21 ஆயிரம் ரூபாய் அபராதம்! May 03, 2017

சாலையில் நடந்து செல்லும்போது பெண்கள் செல்போன் பேசினால் 21 ஆயிரம் ரூபாய் அபராதம்!


சாலையில் நடந்து செல்லும் பெண்கள் செல்போன் பேசினால், அபராதமாக 21 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் என  அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் மதுராவுக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்து ஒன்றில் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுராவின் கோவெர்தன் பகுதியில் உள்ள மடாரா கிராமத்தில் கிராம பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. 

இதில் குற்றச் செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, ஏமாற்றுதல், சூதாடுதல், மது அருந்துவது உள்ளிட்ட குற்றச்செயல்களுக்கு 11 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் பசுக்களை கொல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும், செல்போன் பேசிக் கொண்டே சாலையில் நடந்து செல்லும் பெண்களுக்கு 21 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் மடாரா கிராம பஞ்சாயத்தில் முடிவெடுக்கப்பட்டது. செல்போனில் பேசியபடியே பெண்கள் நடந்து செல்வதால், அவர்கள் கடத்தலுக்கு ஆளாகும் நிகழ்வுகள் அதிகரிக்கும் என்பதாலேயே அபராதம் விதிக்கும் முடிவை எடுத்ததாக கிராம பஞ்சாயத்தார் விளக்கமளித்துள்ளனர். 

Related Posts: