புதன், 3 மே, 2017

தமிழக மாணவர்களுக்கான மருத்துவ இடஒதுக்கீட்டை பறிக்கவே நீட் தேர்வு!” : கனிமொழி May 03, 2017


தமிழக மாணவர்களுக்கான மருத்துவ இடஒதுக்கீட்டை பறிக்கவே நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதாக, திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்தார். 

“நீட் தேர்வு என்பது மருத்துவக்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக என்று தவறான ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் படித்து உருவான மருத்துவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. இந்தியா மட்டுமல்லாமல் உலகமெங்கும் பணியாற்றக் கூடியவர்களாகவும், பிற எல்லோரையும் விட சிறப்பாக பணியாற்றுபவர்களாகவும் அவர்கள் உள்ளனர். 

நீட் தேர்வு என்பது மருத்துவக்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக அல்ல, இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கானதே நீட் தேர்வு. திராவிட இயக்கங்கள் இத்தனை ஆண்டுகள் போராடி பெற்ற சமூக நீதிக்கு எதிரானதாகவே நீட் தேர்வு உள்ளது. இது நிச்சயமாக எந்த வகையிலும் தரத்தை உயர்த்துவதற்கானது அல்ல.” என்று கனிமொழி கூறினார்.

Related Posts: