ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி எடப்பாடி அணியில் திடீரென இணைந்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் நேற்று நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் 122 எம்.எல்.ஏ.க்கள் , 90 சதவீத நிர்வாகிகள் என மேஜிக் நம்பர்களை எடுத்துக் காட்டி எடப்பாடி கொளுத்திப் போட்ட ஒரு வெடி, பன்னீர்செல்வம் அணியின் ஒருவிக்கெட்டை வீழ்த்தியிருக்கிறது.
சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தியே அந்த பேட்ஸ்மேன். வேதாரண்யத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மூர்த்தி தன்னை ஈ.பி.எஸ். அணியில் இணைத்துக் கொண்டுள்ளார்.
எடப்பாடியின் இந்த திடீர் பேச்சால் கட்டுக்கோப்பாகவும், வலிமையானதாகவும் இருந்த ஓ.பி.எஸ். அணி லேசான நடுக்கத்தைச் சந்தித்திருப்பதாகவே கருதப்படுகிறது.
பெரும்பான்மை கையில் இல்லாத போது மிகப்பெரிய நிபந்தனைகளை ஒ.பி.எஸ்.முன்வைத்தது தவறு என்றும், தொண்டர்களை சந்திப்பதால் உடனடியாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
source: kaalaimalar