உத்திரபிரதேச மாநிலத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் ஒருவர் உயிரிழந்தார். 25க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகின. இந்த கலவரத்தை அடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள சிம்லாணா கிராமத்தில், தாக்கூர் சமூகத்துக்கும், தலித் சமூகத்துக்கும் இடையே திடீரென வன்முறை வெடித்தது. இதில் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த தாக்கூர் சமுதாயத்தை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த அந்த சமுதாயத்தினர் தலித் இனத்தவர்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். இதில் 25 வீடுகள் எரிந்து சாம்பலாயின. சாலையில் நின்றிருந்த இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பதிவு செய்த நாள் : May 06, 2017 - 12:10 PM