ராமேஸ்வரம் : இந்திய கடல் எல்லைக்குள் சீனா கப்பல் ஒன்று ஊடுருவ முயற்சித்துள்ளது.இதனை அறிந்த இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்துள்ளனர்.
இலங்கை தெற்கு சிங்களவர் பகுதியில் சீனா வலுவாக காலூன்றியுள்ளது. கொழும்பு மற்றும் அம்பந்தோட்டா துறைமுகங்களை சீனாவுக்கு
தாரைவார்த்துள்ளது இலங்கை.
தாரைவார்த்துள்ளது இலங்கை.
திருகோணமலை உள்ளிட்ட தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் இந்திய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது இலங்கை அரசு.அதேவேளையில் சர்ச்சைக்குரிய கச்சத்தீவு பகுதில் சீன கடற்படை முகாமிட்டிருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.
இந்தநிலையில் தமிழகம் மற்றும் இலங்கை தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையுள்ள பகுதிகளில் சீனா மீன்பிடி படகுகளுக்கும் இலங்கை அனுமதித்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய எல்லைக்குள் சீன கப்பல் ஒன்று நுழைய முயற்சி செய்துள்ளது.தொடர்ந்து கப்பலை நோக்கி இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதனை அடுத்து பதிலுக்கு சீன கப்பலில் இருந்தவர்களும் துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது.முடிவில் சீன கப்பல் விரட்டியடிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுகுறித்து கடலோர கடற்படை சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.ஏற்கனவே பாகிஸ்தான் போர்க் கப்பல்கள் இலங்கையில் முகாமிட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://kaalaimalar.net/chinas-ship-try-to-intrude-indian-waters/