இந்திய ராணுவம் செய்த போலி என்கவுன்டர் குறித்த உண்மையை உயரதிகாரி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் இந்திய ராணுவம், சிஆர்பிஎப் மற்றும் போலீஸார் ஆகியோர் தீவிரவாதிகளுக்கு எதிராக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மார்ச் 30-ந் தேதி தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த இருவரை இந்திய ராணுவம் என்கவுன்டரில் சுட்டுக் கொண்றது.
இந்த என்கவுன்டர் குறித்து டெல்லியில் உள்ள சிஆர்பிஎப் தலைமயகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அறிக்கையை ஆய்வு செய்த சிஆர்பிஎப் ஐஜி ரஜினீஸ் ராய், பல்வேறு முரண்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி டி கல்லிங் என்ற கிராமத்தினர் இருவரை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர்களை சுட்டுக்கொன்றுவிட்டு, அருகில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்துள்ளனர். இதனை அந்த கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவனும், ஒரு பெண்ணும் பார்த்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம், சிஆர்பிஎப் மற்றும் போலீஸார் ஆகியோர் போலி என்கவுன்டரில் ஈடுபட்டிருப்பதும் அதனை உயரதிகாரி ஒருவரே அம்பலப்படுத்தியிருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.