பிரதமர்களிலேயே மிகவும் பலவீனமானவர் நரேந்திர மோடி என்ற கருத்து, செவ்வாய்க்கிழமை காலை முதலே, ‘#ModiWeakestPMever’ டிவிட்டரில் அதிக அளவில் பரவலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தி, ராணுவ வீரர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக கோபத்தை வெளிக்காட்டுகிறார்கள்.
ஜம்மு – காஷ்மீரில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையை சேர்ந்த இருவர் பலியாகினர்.
இந்த வீரர்களின் உடல்களை, பாகிஸ்தானுவத்தினர் சிதைத்து, தலையை துண்டித்திருந்தனர்.
இதன் அறிந்த இந்திய வீரர்கள் கடும் கோபத்துக்கு ஆளானார்கள். இதன் காரணமாக எல்லை பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட வீரர்களில் ஒருவர் பஞ்சாபை சேர்ந்தவர். அவரது பெயர் பரம்ஜித் சிங். மற்றொருவர் உ.பி. மாநிலத்தை சேர்ந்த பிரேம்சாகர்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியுடன் மோடியை ஒப்பிட்டால் , ‘நாட்டை மேம்படுத்துவதற்காக மோதி சிறப்பான திட்டங்களை வகுத்தாலும், தேசிய பாதுகாப்புக் கொள்கைகள் வகுப்பதில் இந்திராகாந்தி சிறந்தவர்.
இதைத்தவிர, பிரதமர் மற்றும் பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களின் அறிக்கைகளும், கருத்துக்களும் பகிரப்படுகின்றன. அதில் ராணுவ வீர்ர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமை குறித்து மத்திய அரசின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
http://kaalaimalar.net/modi-the-weakest-pm-of-india/
NDTV
NDTV