புதன், 3 மே, 2017

வாட்ஸாப்பில் மோடியின் படத்தை வெளியிட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு! May 03, 2017

பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஆபாசமான முறையில் சித்தரித்து வாட்ஸாப்பில் வெளியிட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவத்தில் ஆட்டோ ஓட்டுனராக இருப்பவர் கிருஷ்ண சன்னா தம்மா நாயக். இவர்  'The Balse Boys'  என்ற பெயரில் வாட்ஸாப் குழு இன்றை உருவாக்கி தன் நண்பர்களை பலரையும் அதில் இணைத்துள்ளார். அக்குழுவில் இருந்த பாலகிருஷ்ணன் நாயக் என்பவர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை ஆபாசமான முறையில் சித்தரித்து வாட்ஸப் குழுவில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்டு கோபமடைந்த அதே குழுவை சேர்ந்த மனூஜ்நாத் என்பவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் வாட்ஸாப் குரூப்பின் அட்மினான கிருஷ்ண சன்னாவை கைது செய்துள்ளனர். மேலும், புகைப்படத்தை பகிர்ந்த பாலகிருஷ்ணன நாயக் தலைமறைவாகி உள்ள நிலையில் அவரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். பிரதமரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து வாட்ஸாப் குழுவில் பகிர்ந்த ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.

Related Posts: