செவ்வாய், 2 மே, 2017

ஆபத்தான ஊசிகள், பாலியல் தொல்லை; சிக்கித் தவிக்கும் அரசு விடுதி சிறுமிகள்!! கண்டுகொள்ளாத அரசுகள் !! -பகீர் ரிப்போர்ட் !!

டெல்லி: ஆபத்தான ஊசிகள் மற்றும் பாலியல் தொல்லைகளால் அரசு விடுதியில் உள்ள சிறுமிகள் தவிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

டெல்லியில் உள்ள அரசு விடுதி ஒன்றில் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்கள், அனாதை சிறுமிகள், கடத்தலில் இருந்து மீட்கப்பட்ட சிறுமிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பான இடம் என்று நம்பி தங்கியுள்ள சிறுமிகள், மீண்டும் சித்ரவதைகளால் தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக விடுதியில் உள்ள சிறுமிகள் சிலர், டெல்லி சட்ட உதவி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர். தங்களுக்கு பாதுகாவலர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறியுள்ளனர். மேலும் பட்டினி போடப்படுவதாகவும், கொடூரமாக துன்புறுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் வளர்ச்சிக்காக என்று கூறி, பல்வேறு ஊசிகளை வேறு போடுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவ பரிசோதனை செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 8ஆம் தேதி டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் விடுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார். இதுகுறித்து விடுதி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts: