சென்னையில் கடந்த 15ம் தேதி முதல் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். நேற்று தனது ரசிகர்களிடையே பேசிய ரஜினி, அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம், சமூக வலைதளங்களில் சிலர் என்னை பற்றி கீழ்த்தரமாக பதிவு செய்து வருகின்றனர். ஏன் தமிழர்கள் இவ்வளவு கீழ்த்தரமாக போய்விட்டார்கள்?’ என ரஜினி பேசினார்.
நடிகர் ரஜினிகாந்த் பேசியதை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் ரஜினியின் உருவ பொம்மையை எரித்தனர்.
மேலும் ‘ரஜினிகாந்த் உடனடியாக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் போயஸ்கார்டனில் உள்ள ரஜினி வீடு முற்றுகையிடப்படும்’ எனவும் கோஷமிட்டனர்.
இதனையடுத்து அம்பத்தூர் போலீசார் அவர்களிடம் சமசரம் செய்து அனுப்பி வைத்தனர்..இதனால் அங்கு சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது…