திங்கள், 5 மார்ச், 2018

​இடதுசாரிகளின் பின்னடைவு நாட்டுக்கு பேராபத்து - காங். தலைவர்! March 5, 2018

Image


இடதுசாரிகளுக்கு அரசியல் ரீதியில் ஏற்படும் பின்னடைவு, நாட்டுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்று, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவில் இடதுசாரிகள் வலிமையான சக்தியாக விளங்க வேண்டியது அவசியம், என குறிப்பிட்டார். அரசியல் ரீதியில் இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் எதிர் எதிர் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், இடதுசாரிகள் நாட்டிற்கு அவசியமானவர்கள் என்று  ஜெய்ராம் ரமேஷ் கூறினார். திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 25 ஆண்டுகால ஆட்சியை இழந்து, அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அவர் இக்கருத்தை முன்வைத்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Posts:

  • Missing ‪#‎உறுதி_செய்யப்பட்ட_தகவலுக்கு__உங்களின்__உதவி__தேவை‬…!!! ‪#‎நண்பர்களே‬ இப் புகைப்படத்தில் உள்ள பெண் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சஜினா ; தனது கண… Read More
  • Missing திருச்சி அரியமங்கலம் சிவகாமி அம்மையார் தெருவைச் சேர்ந்தவர் காதர் மைதீன். இவரது மகன் கமர் (எ) ஷாஹின்ஷா . இவர் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் 10 ம்… Read More
  • காவலர்கள் கடுமையாக தாக்கி கடத்தி சென்றுள்ளனர் .. சுலைமான் சேட் மற்றும் சட்ட கல்லூரி மாணவன் நதீம் ஆகியோர் மதுரை காவல் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து போட சென்ற போது ஐந்துக்கும் மேற்பட்ட காவலர்கள் … Read More
  • "சொந்த வரலாற்றை மறந்த சமுதாயம் வரலாறை படைக்க இயலாது' "சொந்த வரலாற்றை மறந்த சமுதாயம் வரலாறை படைக்க இயலாது' இது அமெரிக்க கறுப்பு நிறத்தவர்களுக்கு மட்டுமல்ல ஆக்கிரமிப்பிற்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட… Read More
  • Hadis சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது: நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமைய… Read More