புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு சோதனை நடத்த ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 கிணறுகளும், அரியலூர் மாவட்டத்தில் 6 கிணறுகளும், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு கிணறும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 கிணறுகள் தோண்டப்பட உள்ளன.
புதுக்கோட்டையை விட்டுவிட்டு இந்த 4 மாவட்டத்தை தேர்ந்தெடுக்க காரணம், இங்கே யாரும் போராட்டம் நடத்தவில்லை என்று தமிழக அரசு பிரமாண பத்திரம் வழங்கியதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு தாக்கல் செய்த இந்த பிரமாண பத்திரத்தை சுட்டிக்காட்டித்தான் மத்திய அரசிடம் சோதனைக்கான அனுமதியை ஓன்ஜிசி நிறுவனம்
பெற்றுள்ளது.
பெற்றுள்ளது.
http://kaalaimalar.net/hydrocarbon-test-allowed-to-ongc/