பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, நாடு முழுவதும் 95 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
லோக்சபா தேர்தலில், பா.ஜ., தோல்வியடைந்த, 120 தொகுதிகளில், கட்சியை பலப்படுத்தும் வகையில், நாடு முழுவதும், அமித் ஷா, 95 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இதையடுத்து காஷ்மீரில் இருந்து தனது முதல் பயணத்தைத் தொடங்கினார். 2019 மக்களவைத் தேர்தலைக் குறிவைத்து இந்தப் பயணம் அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
தமிழகத்திற்கு, வரும், 10ம் தேதி, மூன்று நாள் சுற்றுப்பயணமாக வருவதாக இருந்தது. அப்போது, மாநில தலைவர் மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு, பா.ஜ., வட்டாரத்தில் இருந்தது.
அவரது சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, பா.ஜ., அலுவலகம், நேற்றிரவு திடீரென அறிவித்தது.
ஏன் என்றால் ஜனாதிபதி தேர்தல் வரை அமைதியாக இருக்க திட்டமிட்டுள்ளது ! அதன் பிறகு தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டுள்ளது !
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் சென்னை பயணம் திடீர் ஒத்திவைக்கப்பட்டுள்ளாதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
http://kaalaimalar.net/bjp-tamilnadu-amitsha-full/