செவ்வாய், 16 மே, 2017

கொள்ளையடிக்கும் கல்வி கூட்டங்கள் !

இலவச கல்வி, இலவச மருத்துவம், இலவச உணவு. இது இருந்தால் ஒரு நாடு முன்னேறும். ஆனால் தமிழகத்தின் நிலை, கல்வியை ஆண்டுக்காண்டு அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரையில் ஒரு தனியார் பள்ளியில் 1990ம் ஆண்டு எல்.கே.ஜி.,யில் ஒருவர் சேர்த்த போது, ரூ.78 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
அதே மதுரையில் மற்றோர் தனியார் பள்ளியில் இந்த ஆண்டு (2017) அவரது மகனை எல்.கே.ஜி.,யில் சேர்க்க கட்டணம் 24 ஆயிரத்து 200 ரூபாய் கட்டியுள்ளார்.
27 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி இது தான் என இருவர் பள்ளி கட்டண ரசீதுகளை வலைதளங்களில் வெளியிட்டு, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார், அந்த தந்தை.

Related Posts: