திங்கள், 24 ஏப்ரல், 2017

வறட்சியால் இறந்த ஆயிரக்கணக்கான கால்நடைகளுக்கு விரைவில் நிவாரண நிதி!" : அமைச்சர் சரோஜா April 24, 2017



நீலகிரி மாவட்டத்தில் வறட்சியால் இறந்த ஆயிரக்கணக்கான கால்நடைகளுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்கபடும் என தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் வறட்சி நிவாரணம் மற்றும் குடிநீர் வினியோகம் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பி.சங்கர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் சரோஜா கலந்து கொண்டார். 

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் 50-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளிடம் வறட்சி குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். 

மேலும் வறட்சியால் உயிரிழந்த  கால்நடைகளில் காப்பீடு திட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு மட்டுமில்லாமல் உயிரிழந்த அனைத்து கால்நடைகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சரோஜா கூறினார்.