ஞாயிறு, 28 மே, 2017

மாட்டிறைச்சி தடை; சுப.வீயின் கேள்விகளால் மைக்கை கழற்றிய பாஜக நாராயணன்! தெறித்து ஓடிய அயோக்கியர்கள் !! பதில் சொல்ல முடியாமல் திணறல் !!

மாட்டிறைச்சி தடை; சுப.வீயின் கேள்விகளால் மைக்கை கழற்றிய பாஜக நாராயணன்! தெறித்து ஓடிய அயோக்கியர்கள் !! பதில் சொல்ல முடியாமல் திணறல் !! – வீடியோ
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டம் குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் புதுப்புது அர்த்தங்கள் என்கிற நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. இதில் திராவிட இயக்க செயல்பாட்டாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் பாஜகவைச் சேர்ந்த நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர். தம்பி தமிழரசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  இந்து புராண-இதிகாசங்களில் மாட்டிறைச்சி உண்டதற்கான சான்றுகள் குறித்து சுப.வீ பேசினார். நாராயணன் பசுவின் புனிதம் குறித்து விளக்கினார். மிருகவதை குறித்து கவலைப்படும் பாஜக அரசு, ஆடுகள், கோழிகள் இறைச்சிக்காக வெட்டப்படுவது குறித்து கவலைப்படவில்லையா? என விவாதத்தின் ஒரு கட்டத்தில் சுப.வீ கேட்டார். அதற்கு நேரடியாக பதில் சொல்லாத நாராயணன், ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து பேசினார். இடையில் தொகுப்பாளர் அத்தியாவசியமான உணவில் கைவைக்கலாமா? என கேட்டார்.  அதற்கு  நாராயணன் நீங்கள் யார் ஜட்ஜ் செய்ய? என கொந்தளித்து தனது மைக்கை கழற்றினார். தொகுப்பாளர் அவரை சமாதானப்படுத்த முயற்சிக்க நாராயணன் மீண்டும் மீண்டும் சொன்னதையே திரும்பச் திரும்பச் சொன்னார்.  
வீடியோ இணைப்பு கீழே…

Related Posts: