ஒராண்டை நிறைவு செய்யும் பினராய் விஜயன் அரசு- இந்தியாவிலேயே முதன்முறையாக எடுக்கப்படும் 9 புதிய திட்டங்கள்.
கேரளாவில் பினராய் விஜயன் தலைமையில் செயல்படும் கம்யூனிஸ்ட் அரசு ஒரு வருட ஆட்சியை நிறைவு செய்துள்ளது. ஒரு வருடம் என்ற இந்தக் குறுகிய காலக்கட்டத்திற்குள்ளாக, இந்தியாவிலேயே இதுவரை இல்லாத சில புதிய நடைமுறைத் திட்டங்களை மேற்கொண்டுள்ளது கேரள அரசு.
1) ஜூலை மாதம் 2016ம் ஆண்டு முதன் முறையாக கொழுப்பு வரி என்ற வரி அறிமுகப்படுத்தப்பட்டது. பர்கர், பீட்ஸா, டோநட்கள் மீது போடப்பட்ட இந்த வரி மக்களின் ஆரோக்கியத்திற்காக என்றும் வருவாய் ஈட்டும் நோக்கத்திற்காக மட்டுமே கொண்டுவரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
2) மார்ச் மாதத்தில் 1000 கோடி செலவில் 20 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச இணைய சேவையும் 1000 இடங்களில் இலவச பொது வைஃபை ஹாட் ஸ்பாட்களும் மாநிலம் முழுதும் அமைக்கப்பட்டுள்ளது. இதுக் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள நிதியமைச்சர், தாமஸ் ஐஸக், இணைய உபயோகத்தைப் பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமையாக்க வேண்டும் எனும் எண்ணத்திலேயே இத்திட்டம் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
3) அடுத்ததாக “அவாஸ்” என்னும் திட்டத்தின் வாயிலாக கேரளாவில் பணியாற்றும் 34 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
4) அதே போல கேரளாவில் தற்போது மெட்ரோ இரயில் கட்டுமானப் பணிகள் நடந்துக் கொண்டிருக்கும் வேளையில் 60க்கும் மேற்பட்ட திருநங்கைப் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இது தவிர, திருநங்கைகளின் மருத்துவ, கல்வி மற்றும் ஓய்வூதிய செலவுகளுக்காக, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவுமல்லாமல் தேசத்திலேயே முதல் முறையாக திருநங்கைகளுக்கான விளையாட்டுக்கான மாநாடு கேரளாவில் ஏப்ரல் மாதம் நடைபெற்றது.
5) பள்ளி செல்லும் மாணவிகளின் நலனைக் கருதி 30 கோடி செலவில் “She Pad" என்னும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தில் சானிட்டரி நாப்கின்களை மாணவிகளுக்குக் கொண்டு சேர்ப்பது மட்டும் இல்லாமல், பயன்படுத்திய நாப்கின்களை அழிக்கும் இயந்திரமும் எல்லாப் பள்ளிகளிலும் நிறுவப்பட்டுள்ளது.
6) மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பிரத்யேக பாடப்புத்தகங்களை வரும் கல்வியாண்டில் இருந்து பயன்படுத்த இருப்பதாகத் தெரிவித்த முதலமைச்சர், புத்தகங்களைத் தயாரிக்க மருத்துவர்கள், உளவியலாளர்கள், மற்றும் கல்வித் துறைச் சார்ந்த நிபுணர்களின் பரிந்துரைகள் கருத்தில் கொள்ளப்பட்டதுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
7) ஆறு லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் பெறும் குடும்பங்களில் மாணவர்களின் கல்விக்கடனை அரசே திருப்பி செலுத்த 900 கோடி கடன் திருப்பிச் செலுத்தும் திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்கள் வேலைக்குச் சென்றாலும் அவர்களுக்கு இருக்கும் இந்தக் கடன் பாரத்தை குறைக்கவே அரசு இந்நடவடிக்கை எடுத்துள்ளதாக, நிதியமைச்சர் ஐசக் தாமஸ் கூறியுள்ளார்.
8) மே 29 அன்று கேரளாவை முழுமையாக மின்சார வசதி பெற்ற மாநிலமாக பினராய் விஜயன் அறிவித்துள்ளார். புதிதாக மின்சார இணைப்புப் பெற்ற 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் , 40,000 தாழ்த்தப்பட்ட இனத்தவரின் வீடுகள் மற்றும் 20,000 பழங்குடியினரின் வீடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
9) நவம்பர் 1, அன்று முழுமையாக கழிப்பிட வசதி பெற்ற மாநிலம் எனும் அந்தஸ்தையும் கேரளா பெறுகிறது. 400 கோடி செலவில் 200,000 கழிப்பிடங்களைக் கட்டியுள்ள அரசாங்கம், இந்தியாவிலேயே தூய்மையான மாநிலமாகப் பெயர் பெறப் பயணிக்கும் பாதையில் முக்கிய முன்னேற்றமாக இம்முயற்சி அமையும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.