ஞாயிறு, 14 மே, 2017

அடிபணிந்தது கர்நாடகா..! தழைத்தோங்கியது தமிழ்மொழி: தண்ணீர் விஷயத்தில் தோற்று போனாலும் தாய்மொழி விஷயத்தில் ஜெயித்தது..!

‘தாய்மொழியின் மீது கன்னடர்களை விட தமிழர்கள் அதிக பற்றுடன் செயல்படுகிறார்கள். மொழி விஷயத்தில் நாம், தமிழர்களை முன்மாதிரியாக ஏற்றுக்கொண்டு செயல்படவேண்டும்’’ என்று முதல்வர் சித்தராமையா கூறினார்.
மேலும் கன்னட மக்களிடம் முதலில் இருந்தே மொழிப்பற்று குறைவாக இருக்கிறது. கன்னட மொழியில் பேசுவதை விட ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் பேசுவதே வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.
இன்று நேற்றல்ல, நீண்ட காலமாகவே இது நமக்கு பழகிவிட்டது. ஆனால், இதற்கு நேர்மாறாக தமிழ்நாட்டில் நிலைமை உள்ளது.
தமிழர்கள், தமிழ் மொழிக்கு அதிக மதிப்பு கொடுக்கிறார்கள். உயிருக்கு நிகராக தமிழ் மொழியை நேசிக்கிறார்கள்.
இது போல் பிற மாநிலங்களிலும் அவரவர் தாய்மொழியின் மீது அதிக பற்று வைத்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழிக்கு ஏற்பட்டுள்ள நிலையை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது. தாய் மொழியின் வளர்ச்சி மற்றும் தாய் மொழி கல்வி போன்றவைகளுக்கு தமிழர்களை முன்மாதிரியாக கொண்டு செயல்பட வேண்டும்.
தமிழர்களை பார்த்து, மொழிப்பற்றை கற்றுக்கொள்ளவேண் டும். கன்னட மொழியை நிர்வாக மொழியாக கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன்.
அதற்கு முதற்கட்டமாக நிர்வாக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆங்கில வார்த்தைகளுக்கு நிகரான கன்னட வார்த்தைகளை பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
source: kaalaimalar