ஞாயிறு, 14 மே, 2017

நடிகர் ரஜினிகாந்துக்கு ஹாஜிமஸ்தான் மகன் எச்சரிக்கை! May 14, 2017

நடிகர் ரஜினிகாந்துக்கு ஹாஜிமஸ்தான் மகன் எச்சரிக்கை!


ஹாஜி மஸ்தான் மிர்ஸாவை பற்றி தவறாக சித்தரித்தால் நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடரப்படும் என ஹாஜி மஸ்தான் மிர்ஸா வளர்ப்பு மகன் எச்சரித்துள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஹாஜி மஸ்தான் மிர்ஸா கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஹாஜி மஸ்தான் மிர்ஸாவின் வளர்ப்பு மகன் எனக் கூறப்படும் சுந்தர சேகர் என்பவர் ரஜினிக்கு நோட்டீஸ்  அனுப்பியுள்ளார். 

அதில் ஹாஜி மஸ்தான் மிர்ஸாவின் உண்மையான அரசியல் வாழ்க்கை குறித்து திரைப்படம் எடுத்தால் அதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும், அவருடைய அரசியல் வாழ்வை தவறாக சித்தரிக்கும் வகையில், தாதாவாகவோ அல்லது கடத்தல் காரராகவோ சித்தரித்தால் நடிகர் ரஜினி மீது வழக்குத் தொடரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.