சார்க் நாடுகளுக்கான செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் இன்று தொடங்குகிறது.
தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டுக்காக ஜிசாட்-9 செயற்கைக்கோளை, பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இதில் பாகிஸ்தானை தவிர இதர சார்க் நாடுகளின் கூட்டுத்திட்டத்தில் இந்த செயற்கை கோள் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரத்து 230 கிலோ எடையுள்ள இந்த செயற்கை கோளின் ஆயுள் 12 ஆண்டுகள் எனவும், இது 12 கே.யு பேண்ட் கருவிகளை சுமந்து செல்வதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் ஏற்படும் இயற்கை பேரிடர்கள் தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கும் வல்லமை கொண்ட இந்த செயற்கைகோளுக்கு, எரிபொருள் நிரப்பும் பணி நேற்று நிறைவடைந்தது. இதனையடுத்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து நாளை ஜிஎஸ்எல்வி- எப் 09 ராக்கெட்டை ஏவவுள்ளனர். இதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் இன்று துவங்குவதாக சென்னை வந்த இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார்.