வியாழன், 4 மே, 2017

கூகுளின் புரோகிராம்களை திருடி ஆரம்பிக்கப்பட்டதா ‘ஓட்டோ’ நிறுவனம்? May 04, 201




கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரின் உதவியுடன் நூற்றுக்கணக்கான புரோகிராம்களை திருடி, அதைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே ‘OTTO' நிறுவனம் என்று கூகுள் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக இணைய உலகின் ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ‘கூகுள்’, கடந்த 2009 ஆம் ஆண்டு ‘ Waymo project’ எனப்படும் தானியங்கி கார்களை உருவாக்கும் திட்டத்தை தொடங்கியது. கூகுள் மேப்பின் உதவியோடும் கார்களில் பொருத்தப்படும் பிரத்யேக சென்சார்கள் மூலமாகவும் ஓட்டுனரின் உதவியின்றி கார்களை இயக்குவதே ’waymo' திட்டத்தின் குறிக்கோள். இந்த திட்டத்திற்காக கடந்த 8 ஆண்டுகளாக தன்னுடைய ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது ‘கூகுள்’

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான அந்தோனி லெவண்டோவ்ஸ்கி மற்றும்  ‘லியோர் ரான்’ ஆகியோர் ’உபர்’ நிறுவனத்தின் உதவியுடன் ‘ஓட்டோ’ எனப்படும் தானியங்கி கார்களை உருவாக்கும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். இதில் அந்தோனி லெவண்டோஸ்கி என்பவர் கூகுளின் ‘waymo project'-ன் தொழில்நுட்ப தலைவராகவும், லியோர் ரான் என்பவர் ‘google map project'-ன் குழு தலைவராகவும் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தங்களுடைய நிறுவனத்தில் இருந்து அந்தோனியின் மூலம் நூற்றுக்கணக்கான புரோகிராம்களை திருடி உபர் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் தான் ’ஓட்டோ நிறுவனம்’ என்று கூகுள் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், கூகுள் நிறுவனத்தில் இருந்து அந்தோனி வெளியேறிய அடுத்த நாளே உபர் நிறுவனத்தின் மூலம் அவரது வங்கிக்கணக்கிற்கு 25 கோடி ரூபாய் பரிமாணம் நடந்துள்ளதாகவும் கூகுள் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. இவ்வழக்கால் உபர் நிறுவனம் தற்போது கடும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது.

Related Posts: