ரொக்க பரிமாற்ற விவகாரத்தில், வங்கிகள் அனைத்தும் கந்து வட்டிக்காரர்களைப் போன்று செயல்படுவதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கமாட்டோம் என மத்திய, மாநில அரசுகள் தெரிவித்தும், ஆன்லைன் வர்த்தகம் மூலம் வணிகம் சுரண்டப்படுவதாக தெரிவித்தார்.
இதனை கண்டித்து மே 5ம் தேதி தமிழகம் முழுவதும் வங்கி புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக கூறினார். இதற்கு பின்னரும் தீர்வு காணப்படவில்லை என்றால் தொடர்ந்து மக்களை திரட்டி வங்கி புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தார். ஜி.எஸ்.டி மசோதா தொடர்பாக மத்திய நிதி அமைச்சரை சந்தித்து மனு அளிக்கவுள்ளதாக கூறிய அவர், வரும் 5ம் தேதி நடைபெறும் வணிகர் சங்க மாநாடு திருப்புமுனை மாநாடாக அமையும் என்று தெரிவித்தார்.