வியாழன், 4 மே, 2017

தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் சம்மேளனம் போராட்ட அறிவிப்பு May 03, 2017




தமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்க அனுமதிக்காவிட்டால் வரும் 8-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 38 அரசு மணல் குவாரிகளில் தற்போது 21 குவாரிகள் மட்டுமே இயங்கி வருகிறது. இதனால் மணல் லாரி ஓட்டுநர்கள், கட்டுமான தொழிலாளர்கள் என பலர் வேலையின்றி தவித்து வருகின்றனர். எனவே மணல் அள்ள பொது பணித்துறை அனுமதி அளிக்கக்கோரி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் திருச்சி தலைமை பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்மேளன தலைவர் செல்ல.ராஜாமணி, இதுதொடர்பாக விரைவில் முதல்வரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் வரும் 8-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts: